

தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
தேனி மாவட்டத்தில் வருசநாடு, கூடலூர், தேவாரம், போடி, தேனி, தேவ தானப்பட்டியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியே விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோடைக்கு முன்பே தேனியில் வெப்பம் அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் புற்கள் காய்ந்துள்ளன.
இதனால் கடந்த 2 நாட்களாக இப்ப குதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. தேனி அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயில் பகுதி, போடி அணைக் கரைப்பட்டி, மரக்காமலை, மதிகெட்டான் சோலை, புலியூத்து, அத்தியூத்து, வலசத்துறை பகுதிகளில் தீ பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் காட்டுப்பன்றி, காட்டெருமை, மான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தற்போது இரவில் காட்டுத் தீயால் இந்த விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இதனால் மலையடிவார விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தீயால் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயமும் உருவாகி உள்ளது. இந்நிலையில் தீயணைப்பு மற்றும் வனத் துறையினர் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். பகலில் தீ முற்றிலும் அணைந்திருந்தது.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதி காரி கவுதம் கூறுகையில், வறட்சியால் ஏற்பட்ட தீயா அல்லது சமூக விரோதிகள் தீ வைத்தனரா என ஆய்வு நடக்கிறது. மலையடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி தீ செல்வதால் விலங்குகள் அடிவாரப் பகுதிக்கு வர வாய்ப்பில்லை என்றார்.
வருசநாடு, வெள்ளிமலை பகுதியைப் பொறுத்தளவில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் வனப்பகுதியில் வெப்பம் குறைந்துள்ளது. மேலும் மேகமூட்டமாக இருப்பதால் அப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.
கோடையில் ஏற்படும் காட்டுத் தீயால் பறவைகள், நுண்ணுயிர்கள், மூலிகைத் தாவரங்கள் அழிவு என பல்வேறு இழப்பு கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக் கவும், கண்காணிக்கவும் தீத்தடுப்புக் கோடுகளை வனத்தில் ஏற்படுத்தவும் வனத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர்.