

இருமல், ஜலதோஷம் உள்ளவர்கள் பழநி கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவாகிய கோவிட் - 19 வைரஸ், தற்போது ஈரான், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவிட் 19 நோய்த் தடுப்பு நடவடிக்கையாக இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதையும், விழாக்களில் கலந்துகொள்வதையும் தவிர்க் கவேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாருக்கேனும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்படுத்தும் மலை அடிவாரத்தில் உள்ள ரோப்கார், இழுவை ரயில், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.