வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள்,வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்கிற அரசாணையை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை என தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் எண் - 3312 நாள் 29.12.1983 மற்றும் ஆணை எண் 499 நாள் 29.12.1984-ம் ஆண்டிலிருந்து முறையே 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும்.
கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in