

தாம்பரம் அருகே பெருங்களத் தூரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.16 கோடியில் 192 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத் தூரில், பாரத பிரதமரின் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் சார்பில் ரூ.16 கோடி மதிப்பில், 192 அடுக்கு மாடி குடியிருப்பு களுக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
40 சதவீத பணிகள் நிறைவு
தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தப் பணியை தாம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான பணிகள் தொடர்பான விவரங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது: மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் பிரதமரின் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் 192 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டத்தில் ஆட்சேபகரமான பகுதியில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு இல் லாத, நிலம் இல்லாத குடியிருப்பு வாசிகளுக்கு தகுதியின் அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்.
ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 400 சதுர அடி உள்ள குடியிருப்பு வீட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் ரூ.7.30 லட்சமும் பயனாளிகளின் பங்கு தொகையாக ரூ.4 லட்சமும் சேர்த்து ரூ.11.30 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்படு கின்றன.
இந்த வீடுகளுக்கு குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும். தரை தளத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த வசதியும், 4 மாடி யில் ஒவ்வொரு மாடியிலும் 8 வீடு கள் கொண்ட 4 பிரிவாக வீடுகள் கட்டப்பட உள்ளன.
107 பயனாளிகள் தேர்வு
இந்தக் கட்டுமான பணி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படு கிறது. இந்த திட்டத்தில் ஏற் கெனவே 107 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள வீடுகள் மாவட்ட ஆட்சியர் பரிந் துரைக்கும் வீடு இல்லாத பயனாளி களுக்கு வழங்கப்படும். பயனாளி கள் தாங்கள் செலுத்த வேண்டிய ரூ. 4 லட்சம் செலுத்திய பின்பு வீடுகள் வழங்கப்படும் என்றார்.