Published : 11 Mar 2020 07:55 AM
Last Updated : 11 Mar 2020 07:55 AM

பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

‘பிரண்ட்ஸ்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011-ம் ஆண்டு ஒரு புகார் அளித்தார். 3 ஆண்டுகளாக தன்னை காதலித்த சீமான், திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி, சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் எந்த நேரத்திலும் சீமான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமானை போலீஸார் கைது செய்யவில்லை. இதற்கிடையே விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சீமான் வெளிப் படையாக எதுவும் பேசாமால் இருக்கும் நிலையில், அவரின் தொண்டர்கள் விஜயலட்சுமியின் பேச்சு களுக்கு பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின் றனர். அதைத் தொடர்ந்து, சீமான் தரப்பினர் தன்னை கொச்சைப் படுத்தி திட்டிவிட்டதாக கூறி, விஜயலட்சுமி நேற்று முன்தினம் ஒரு வீடியோ பதிவை வெளியிட் டுள்ளார்.

அதில், சீமானையும், அவரது தொண்டர்களையும் விமர்சித்ததுடன், ‘நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டேன். நான் ரொம்ப நொந்து போயிருக்கிறேன். சீமானை தப்பிக்க விடமாட்டேன். காவல் ஆணையர் அலுவலகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். சீமானை தூக்கி உள்ளே போடும்வரை போராடுவேன்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அதில், ‘சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி தகவல் பரப்பு கின்றனர்.

சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் என்னைப் பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி, விசாரணை நடத்து வதாக கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x