Published : 11 Mar 2020 07:47 AM
Last Updated : 11 Mar 2020 07:47 AM

தமிழகத்தில் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு: கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலால் 2 மடங்கு அதிகரித்த விற்பனை

ஒய். ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் கோவிட் -19 வைரஸ் தாக்கமும், அச்சமும் அதிகரித்து வரும் நிலையில் அந்த நோயில் இருந்து பாதுகாக்க முகக் கவசத்துக்கான தேவையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

சீனா போன்ற வெளிநாடுகளுக்கு முகக் கவசம் மொத்தமாக ஏற்று மதி செய்யப்படுவதால், உள்ளூ ரில் அதற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இதுவரை, இந்த நோய்க்கு உலக அளவில் 3,800 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் சீனாவில் மட்டும் 3,120 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 45 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். தமிழகத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய் யப்பட்டுள்ளது. இந்த நோய் அறி குறியுடன் இருப்பவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்படுகிறது.

கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலை யங்கள், பஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், மற்றவர் களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது அதிகரித்துள்ளது.

அதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்துக் கடைகளில் முகக் கவசத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோவிட் - 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க ‘என் 95’ என்ற 6 அடுக்கு முகக் கவசம் பரிந் துரைக்கப்பட்டது. தற்போது அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் 4 அடுக்கு முகக் கவசம், 3 அடுக்கு முகக் கவசம்கூட அணியத் தொடங்கி உள்ளனர்.

ஒரு, இருமடிப்பு முகக் கவசம் ரூ. 15 முதல் ரூ. 20 வரையிலும், எம் 90 முகக் கவசம் ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. என் 95 ரக கவசம் ரூ. 90-ல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்துள்ளது.

பொதுவாக மருத்துவமனை களில் அறுவை சிகிச்சை அரங்கு கள், நுரையீரல் சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரிவோர் மட்டும் முகக் கவசம் அணிவர். சுவாசக் கோளாறு உள்ள மக்கள், காற்று மாசில் இருந்து தப்பிக்க முகக் கவசம் அணிவர். தற்போது மக்களுக்கு சாதாரண சளி, தும்மல், இருமல் வந்தாலே மற்றவர்கள் அச்சம் அடைகின்றனர். அதனால் முகக் கவசத்தின் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின் றனர்.

சீனா போன்ற வெளிநாடுகளில் கோவிட் -19 வைரஸ் பாதிப்பால் அங்கு தேவை பல மடங்கு அதி கரித்துள்ளது. அதனால் முகக் கவ சம் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்ததால் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து மதுரை நரிமேட்டைச் சேர்ந்த முகக் கவசம் உற்பத்தி யாளர் அபிலாஷ் கூறியதாவது:

முன்பைவிட, தற்போது முகக் கவச விற்பனை 2 மடங்கு அதி கரித்துள்ளது உண்மைதான். ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ததால்தான் தட்டுப்பாடு என்று கூற முடியாது. தேவை அதிகரித்ததால்தான் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. கோவிட் - 19 வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க 2 அடுக்கு, 3 அடுக்கு முகக் கவசம் அணியலாம்.

தட்டுப்பாடு அதிகரிப்பால் வெளி மார்க்கெட்டில் முகக் கவசத்தின் விலையை இஷ்டம்போல ஏற்றி விற்கின்றனர். அரசு, தனியார் மருத்துவ நிறுவனங்களில் தட்டுப்பாட்டை சமாளிக்க வட மாநிலங்களைச் சேர்ந்த முகக் கவச உற்பத்தி நிறுவனங்களிடமும், எங்களிடமும் இருந்தும் கொள் முதல் செய்கின்றனர்.

கை கழுவும் திரவம்

முகக் கவசம் அணிவதும், கை கழுவும் திரவத்தை (ஹேண்ட் சானிடைசர்) பயன்படுத்தி கை களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், கோவிட் 19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் தங் களை தற்காத்துக் கொள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த ஹேண்ட் சானிடைசர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘என் 95’ முகக் கவசம் ஏன்?

2 அடுக்கு, 3 அடுக்கு முகக் கவசம்.

‘என்‌ 95' போன்ற முகக்கவசம் காற்றின்‌ நுண் துகள்களை 95 சதவீதம்‌ தடுத்து நிறுத்திவிடும்‌. அதனால்தான்‌ இது என் 95 என அழைக்கப்படுகிறது. மேலும்‌ இது 99 சதவீத பாக்டீரியா (0.3 மைக்ரான் தடிமம்) போன்ற நுண்கிருமிகளைத்‌ தடுத்து நிறுத்தி விடும்‌. அதன்‌ பயனாக சுத்தமான காற்றைச்‌ சுவாசிக்கவும்‌ கோவிட் -19 போன்ற நுண்ணிய வைரஸ்‌ தொற்றுகளைத்‌ தவிர்க்கவும் உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x