நிர்வாகம் வெளியிட்ட சம்பள பட்டியல் தவறு - என்எல்சி தொழிற்சங்கங்கள்

நிர்வாகம் வெளியிட்ட சம்பள பட்டியல் தவறு - என்எல்சி தொழிற்சங்கங்கள்
Updated on
1 min read

என்எல்சி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில் தொழிலாளர் களின் சம்பளப் பட்டியலை நிர் வாகம் வெளியிட்டு பணிக்கு திரும்ப அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த சம்பள விவரம் குறித்து தவறான தகவல்களை நிர்வாகம் வெளியிடுவதாக தொழிற்சங் கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வை அமல்ப்படுத்த கோரி தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நடந்த அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தது. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், காலவரையற்ற உண்ணா விரதம் என பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் என்எல்சி தொழிலாளர்களின் கோரிக் கையை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் நீங்கலாக அனைத் துக் கட்சியினர் 6 இடங்களில் ரயில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் என்எல்சி தொழி லாளர்களின் தொடர் உண்ணாவிர தம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதில் போக்குவரத்து துறை மத்திய பணிமனை தொழி லாளர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே என்எல்சி நிர் வாகம் தொழிலாளர்களுக்கு வழங் கப்படும் சம்பள விபரம் குறித்து பட்டியலை வெளியிட்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அழைப்புவிடுத்தது. இதனையடுத்து நெய்வேலியில் உள்ள ஹெச்எம்எஸ் தொழிற் சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சம்பள விகிதம் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்பு பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள் என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தவறான தகவல்களை கொடுத்து வருவதாக தெரிவித் தனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படும் வரை தொழிலா ளர்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in