Published : 10 Mar 2020 10:14 AM
Last Updated : 10 Mar 2020 10:14 AM

டெல்டாவில் இயங்கும் எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படும் 189 எண்ணெய் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றார்.

மாநாட்டின் தொடக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது பகுதி பிரச்சினைகளை மாநாட்டின் தீர்மானமாக முன்மொழிந்தனர்.

இதைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது செயல்பட்டுவரும் 189 எண்ணெய்க் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நேற்று விவசாயிகளால் வெளியிடப்பட்டன.

மாநாட்டில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த வேளாண் அறிஞர்கள் விளக்கமளித்தனர். விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பயரி எஸ்.கிருஷ்ணமணி, தஞ்சை வ.பழனியப்பன், திருவாரூர் வரதராஜன், பாலாறு வெங்கடேசன், தர் உள்ளிட்ட பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x