Published : 10 Mar 2020 06:59 AM
Last Updated : 10 Mar 2020 06:59 AM

மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. தற்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏ.க்கள் எண் ணிக்கை அடிப்படையில் ஆளும் அதிமுகவும், பிரதான எதிர்க் கட்சியான திமுகவும் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி களில் வெற்றி பெற முடியும். திமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், அதிமுக சார்பில் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதிமுக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது

இந்நிலையில், திமுக வேட் பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கே.சீனிவாசனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா அர.சக்கரபாணி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன் (சென்னை மேற்கு), பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு), மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), மாதவரம் சுதர்சனம் (சென்னை வடக்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன் உள்பட இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x