Published : 10 Mar 2020 06:56 AM
Last Updated : 10 Mar 2020 06:56 AM

கோவிட் - 19 வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்; பேருந்து, ரயில்களை தூய்மையாக பராமரிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு : 1,088 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்

கோவிட் - 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 104 நாடுகளுக்கு கோவிட் - 19 வைரஸ் (கரோனா) பரவியுள் ளது. இந்தியாவில் 43 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரி சோதனையில் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ‘கோவிட் - 19’ வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கள் சி.விஜயபாஸ்கர், கே.ஏ. செங்கோட்டையன், டி.ஜெயக் குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழ கன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற் றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

இக்கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பல்வேறு உத்தரவு களைப் பிறப்பித்தார். கோவிட் - 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங் கிணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். இருமல், தும்மல் மூலம் பரவுவது குறித்தும், அடிக்கடி கைகளை கழுவுதலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல், மருத்துவமனை களுக்கு வந்து செல்லும் நோயாளிகள், அவர்களின் உற வினர்கள், டாக்டர்கள், செவிலியர் கள், பணியாளர்கள் உட்பட அனை வரும் கை கழுவும் திரவத்தினால் கண்டிப்பாக கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டம் முடிவில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல் வேறு அறிவுறுத்தல்களை முதல் வர் பழனிசாமி வழங்கினார். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் என்ன மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று துறை வாரியாகவும், மாவட்ட ஆட்சியர் களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தாம்பரத்தில் சிகிச்சை மையம்

சென்னை அரசு பொது மருத் துவமனை உட்பட படுக்கை வசதி யுடன் கூடிய 300 சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை, திருச்சி, மதுரை, கோவை புறநகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்தை ஏற்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி சென்னை புறநகரான தாம்பத்தில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

இதுவரை 70 பேரின் ரத்த மாதிரி களை பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு மட்டும் பாதிப்பு இருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேருக்கு பாதிப்பு இல்லை. 8 பேரின் பரிசோதனை முடிவு கள் இன்னும் வரவில்லை. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம்.

உரிய மருந்து இல்லை

இந்த வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க அதற்குரிய மருந்து இல்லை. காய்ச்சல், மூச்சுத் திணறலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளே இதற்கும் கொடுக் கப்படுகிறது. தவறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து நட வடிக்கை எடுக்கப்படும். தமிழகத் தில் தேனி தவிர மேலும் 4 இடங் களில் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், நோயாளிகள், டாக்டர்கள், செவி லியர்கள் மட்டும் முகமூடி அணிந்து கொண்டால் போதுமானது.

கண்காணிப்பில் 1,088 பேர்

வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர் களுக்கு அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களை பொது இடங்களுக்கு செல்லவிடா மல் தொடர்ந்து 28 நாட்களுக்கு வீட்டுக் கண்காணிப்பில் வைக் கிறோம். அதன்படி, தற்போது 1,088 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை

இந்த 5 நாடுகளில் இருந்து யாரும் வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தற்போது விசாவை ரத்து செய்துள்ளது. இந்த வைரஸ் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 044-29510400, 044-29510500, 011-23978046, 94443 40496, 87544 48477 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 104 சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x