அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: தேமுதிகவுக்கு மறுப்பு; ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: தேமுதிகவுக்கு மறுப்பு; ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

அதிமுக மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு கூட்டணிக் கட்சி சார்பில் வாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ள நிலையில் 6 எம்.பி.க்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இதில் திமுக, அதிமுக தலா 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் அளவுக்கு எம்.எல்.ஏக்களை வைத்துள்ளதால் இரண்டு கட்சிகளும் தலா 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்யலாம் என்ற கருத்து நிலவியது.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இரண்டு கட்சிகளும் தலா 3 வேட்பாளர்களை நிறுத்தினால் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.

திமுக தனது கட்சி சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை அறிவித்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் இன்று 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in