Published : 09 Mar 2020 01:09 PM
Last Updated : 09 Mar 2020 01:09 PM

சட்டப்பேரவை வரும் உறுப்பினர்களுக்கு கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: செவிலியர்கள் விளக்கிக் காட்டினர்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினியைக் கொடுத்து சுத்தப்படுத்தச் சொல்லிக் கொடுத்து உள்ளே அனுப்பினர்.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுதும் 42 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டு அவர் அரசு பொதுமருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் பல வழிகாட்டு முறைகளை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பாமானது. இதையடுத்து சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் , காவலர்களுக்கு சுகாதாரத்துறை செவிலியர்கள் கைகளைச் சுத்தமாக வைப்பத்து குறித்து கிருமி நாசினி அடித்து செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் நோட்டீஸ்களையும் வழங்கினர். சட்டப்பேரவைக்குள் செல்லும் அனைவரும் கிருமி நாசினியைக் கைகளில் தெளித்து சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி தொடங்கியது. பிப்.14-ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், 4 நாட்கள் விவாதம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மானியக்கோரிக்கைகான கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடக்கிறது. இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சாதாரணமாக வந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன் மட்டும் முகத்துக்கு மாஸ்க் அணிந்தபடி வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x