Published : 09 Mar 2020 08:46 AM
Last Updated : 09 Mar 2020 08:46 AM

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு: எகிப்து சுற்றுலா கப்பலில் தமிழர்கள் 18 பேர் தவிப்பு

எகிப்து நாட்டில் சுற்றுலா கப்பலில் பயணிகளுக்கு கோவிட்-19 (கொரோனா)வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அக்கப்பலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

எகிப்து நாட்டுக்குச் சுற்றுலா சென்றஏ சாரா என்கிற பயணிகள் கப்பலில்33 பயணிகள், 12 கப்பல் சிப்பந்திக ளுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்புஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து, இக்கப்பல் லக்ஸார் நகரில் நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 18 தமிழர்களும் உள்ளனர்.

இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் சுற்றுலா சென்றவர்கள். இவர்கள் தங்கள் பயணத் திட்டப்படி கடந்த மாதம் 27-ம் தேதி புறப்பட்டு நேற்றுமுன்தினம் இந்தியா திரும்பி வருவதாக இருந்தது. ஆனால், தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத் தின்பேரில் அலெக்சாண்ட்ரியா துறை முகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, 18 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பலில் கோவையைச் சேர்ந்தவனிதா, அவரது கணவர் ரங்கராஜ் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் கோவையில் சரணாலயம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகின் றனர். இவர்கள் குறித்து அவர்களது மகள் சரண்யா கூறும்போது, “சுற்றுலா சென்றவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள். அவர்களுக்கு சரியான உணவு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாப் பயணத்துக்கு திட்டமிட்டபோதே, கோவிட்-19 வைரஸ் குறித்து விசாரித்தோம். அப்போது, எந்தப் பிரச்சினையும் இல்லை பாதுகாப்பான பயணம்தான் என்றனர்.

ஆனால், தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக கப்பலை நதியில் நிறுத்தியுள்ளனர். அதில் உள்ளவர்களை அரசு விரைவாக மீட்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x