மின்சாரத்தில் ஓடும் திறன் கொண்ட ரிவோல்ட் மோட்டார் சைக்கிள் அறிமுகம்: அண்ணாநகர், வேளச்சேரியில் புதிய கிளைகள் திறப்பு

மின்சாரத்தில் ஓடும் திறன் கொண்ட ரிவோல்ட் மோட்டார் சைக்கிள் அறிமுகம்: அண்ணாநகர், வேளச்சேரியில் புதிய கிளைகள் திறப்பு
Updated on
1 min read

பேட்டரி மூலம் மின்சக்தியில் இயங்கக்கூடிய ரிவோல்ட் மோட்டார் சைக்கிள் டெல்லி, புனே,அகமதாபாத், ஹைதராபாத் நகரங்களுக்கு அடுத்ததாகசென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஷோரூம்கள் அண்ணாநகர், வேளச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த செய்திக்குறிப்பு:

ரிவோல்ட இன்டெலிகார்ப் நிறுவனத்தின் ரிவோல்ட் மோட்டார் சைக்கிள்கள் ஆர்வி400, ஆர்வி300 என 2 மாடல்களில் வெளியாகியுள்ளன. இவற்றில் ஆர்வி400 பைக் 72வேல்ட் ஆற்றலை உருவாக்கும் 3.24KWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தொலைவு வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகும். சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டது.

ரிவோல்ட் ஆர்வி400 பைக்கை சுலப தவணையில் வாங்க முடியும்.அதாவது ஒருமுறை செலுத்தும் முன்பதிவு கட்டணமாக ரூ.3999 உடன் 38 மாதங்களுக்கு ரூ.3999 செலுத்தி சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆர்வி300 பைக்குக்கு ரூ.2999 முன்பதிவு கட்டணத்துடன் 36 மாதங்களுக்கு ரூ.2999 செலுத்த வேண்டும்.

மொத்தமாக முழு தொகையையும் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக 'தி ரிவோல்ட் கேஷ் டவுன்' என்ற திட்டம் உள்ளது. இதன்மூலம் ஆர்வி400 எக்ஸ்ஷோரூம் விலைரூ.1,03,999-ம் (கூடுதலாக முன்பதிவு கட்டணம் ரூ.3999), ஆர்வி300 பைக்குக்கு ரூ.84,999-ம் செலுத்தி சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

இதனுடன் வாகனப்பதிவு, ஆர்டிஓகட்டணங்கள், காப்பீடு, ஸ்மார்ட்கார்டு மற்றும் 3 ஆண்டு 4ஜி இணைப்புக்கான ஒருநேர கட்டாயகட்டணம் ஆகியவை இருக்கும். எக்ஸ்ஷோரூம் விலை ஃபேம்-IIமானியத் தொகை கழிக்கப்பட்டதற்கு பிந்தைய தொகையாகும். ஆர்வி400 பைக் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 90 நாட்களாக உள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிமுக விழாவில், ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனர் ராகுல் ஷர்மா பேசும்போது, "சாமானிய மக்களையும் மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்கிபயன்படுத்தச் செய்வதே எங்கள்நோக்கமாகும். இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் இந்த பைக்குக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in