

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை.
அது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்றும், இத்தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு செய்யும் துரோகம் ஆகும். கூட்டாட்சி தத்துவம்தான் அறிவியல் அரசியலாகும்.
ஆனால், இதை முற்றாகவே தலைகீழாக்கும் வேலையை, மாநில உரிமைகளைப் பறிக்கும் வேலையை மத்திய அரசு செய்வது கண்டிக்கத்தக்கது.