

“ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தி இல்லை. அந்த வகையில் எனக்கு ஏமாற்றம்தான்” ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்து ரஜினி பேசிய இந்தப் பேச்சானது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பிவிட்டி ருக்கிறது. ரஜினி தமிழரே இல்லை என்றொரு சர்ச்சையை சிலர் ஆரம்பத்திலிருந்தே கிளப்பி வருகிறார்கள். அவர்களது வாயை அடைக்க, கட்சித் தலைவராக மட்டும் இருந்துகொண்டு முதல்வர் வேட்பாளராக இன்னொரு நபரை முன்னிலைப் படுத்தலாம் என நினைக்கிறாராம் ரஜினி. அவரது இந்தக் கருத்தை மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேரும் அதை ஆட்சேபித்தார்களாம். “நீங்கள் முதல்வராக வருவேன் என்று சொன்னால் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடலாம்; யாருக்கும் நாம் ஏணியாக இருக்க வேண்டாம்” என்று மாவட்டச் செயலாளர்கள் ஒருமித்து சொன்னார்களாம். இதைத்தான் தான் எதிர்பார்க்காத ஏமாற்றம் என்று சொன்னாராம் ரஜினி.
- காமதேனு இதழிலிருந்து (18.3.2020)