

கரோனோ வைரஸ் குறித்து அலைபேசியில் வரும் காலர் டியூன் அந்தந்த மாநில மொழிகளில் இருத்தல் வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரனோ வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள, அலைபேசியின் காலர் டியூன் வாயிலான விழிப்புணர்வு பிரச்சாரம், அந்தந்த மாநில மொழிகளில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் அமைய வேண்டும்.
வாடிக்கையாளர் சேவைக்கு எப்படி அந்தந்த மாநிலத்திற்கான மொழிகளில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை அளிக்கின்றனவோ, அதுபோல, கொரனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வு மொழியினையும் அந்தந்த மாநில மொழிகளில் மாற்ற வேண்டும்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருமலுடன் துவங்கும் காலர் டியூனை, விழிப்புணர்வு வாக்கியங்களை மட்டும் பயன்படுத்தி துவங்குமாறு மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.