சர்வதேச மகளிர் தினம்: அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினம்: அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
Updated on
1 min read

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணியின் சார்பில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

அவர் அனைவருக்கும் தமது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

பின்னர், கழக மகளிர் அணியின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

ஏற்பாடுகளை மகளிர் அணிச் செயலாளரும், கழக மாநிலங்களவைக் குழு கொறடாவுமான விஜிலா சத்தியானந்த், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கஇணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருமான டாக்டர் ஏ. சரோஜா ஆகியோர் செய்திருந்தனர். இன்றைய நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in