‘‘உரிமை கொடுப்பது அல்ல; எடுத்துக் கொள்வதில் இருக்கிறது’’ - ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

‘‘உரிமை கொடுப்பது அல்ல; எடுத்துக் கொள்வதில் இருக்கிறது’’ - ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
Updated on
1 min read

பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘மார்ச் - 8 உலக உழைக்கும் மகளிர் தினம்!

சமூகத்தின், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

பெண்ணைப் போற்றுதலில் இல்லை பெருமை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்.

உரிமை என்பது கொடுப்பது அல்ல; அவர்களாகவே எடுத்துக் கொள்வதில் இருக்கிறது.

"இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம் உலகுக்கு! பெண்ணே வாழ்க’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in