‘கோவிட்-19’ வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: வணிகர்களுக்கு விக்கிரமராஜா வலியுறுத்தல்

‘கோவிட்-19’ வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: வணிகர்களுக்கு விக்கிரமராஜா வலியுறுத்தல்
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸ் குறித்து பொதுமக்களிடம் வணிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட் 19 வைரஸ் சீனா தொடங்கி தமிழகம் வரை வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது. இந்த வகை கிருமிகள் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், வணிகர்களாகிய நாம்தான் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறோம். அதனால் அரசின் கொள்கை முடிவுகள் மக்களை சென்றடைய நாம் பாலமாக இருக்க வேண்டும்.

அதனால் கோவிட் 19 வைரஸ்தொடர்பாக வணிகர்கள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது நாடு முழுவதும் இக்கட்டான சூழல் நிலவும் நிலையில் சுத்தமான, சுகாதாரமான சூழல்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பிரச்சார யுத்திகள், துண்டு பிரசுரங்கள், மற்றும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை அரசு அறிவித்துள்ள சுகாதார மையங்களுக்கு கொண்டு செல்ல பொதுமக்களுக்கு வணிகர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கொரோனா பரவாமல் தடுக்க பேரமைப்பு நிர்வாகிகளும், வணிகர்களும் முழு வேகத்துடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in