பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம்

படம்: எல்.சீனிவாசன்.
படம்: எல்.சீனிவாசன்.
Updated on
1 min read

உடல்நலக் குறைவால் காலமான திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நடந்தே சென்றனர்.

திமுக பொதுச்செயலாளரும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவரது உடல் நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் 7-ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் காலமானார். பின்னர் அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் ரஜினிகாந்த், கி.வீரமணி, வைரமுத்து, ஜி.கே.வாசன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொகிதீன், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மணிக்கணக்காக வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்திற்கு அருகில் உள்ள வேலங்காடு மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊரவலத்தில் ஸ்டாலின், கி.வீரமணி, துரை முருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி,கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடந்தே சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in