

மக்களை ஏமாற்றும் வகையில்தான் டெல்டா பகுதி பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: என்பிஆர் (NPR) காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதே சட்டத்தில் தாய், தந்தை பிறந்த இடம் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து கணக்கெடுப்பு நடத்தினால் ஏற்கக் கூடியது.
அமைச்சர்கள் டவுன் பஸ்சில் செல்வது போல, டெல்லி சென்று தங்களது சொந்தப் பிரச்சினைகள் குறித்து மட்டும் மத்திய அரசிடம் பேசி வருகின்றனர்.
பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் ஆளும் கட்சியினர் ஆதரவுடன் பத்தி ரிகையாளர்கள் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும் வகையில் வரும் தேர்தலில் கூட்டணியை அமைத்துள்ளோம். இபிஎஸ் தந் திரமாக மக்களை ஏமாற்றும் முயற்சியில்தான், டெல்டா பகுதி யைப் பாதுகாப்பு வேளாண் மண் டலமாக அறிவித்துள்ளார்.
பெண் சிசுக் கொலையைத் தடுக்க ஜெயலலிதா ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது தமிழக அரசு அந்தக் கண்காணிப்பையும், நடவடிக் கையையும் கைவிட்டதால் மீண்டும் பெண் சிசுக்கொலை மதுரை மாவட்டத்தில் தலை தூக்கியுள்ளது. அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை சென்னை ராயப்பேட்டையில் தொடங்கவுள்ளோம் என்று கூறினார்.