

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் மண் பானை கண் டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மண லூர் ஆகிய 4 இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வுக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு, பிப்.19-ம் தேதி அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடந்த வாரம் கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணிக்காக சுத்தப் படுத்தியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் குழி தோண்டியபோது மூன்றரை அடி ஆழத்தில் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுவர் அருகிலேயே மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது.