

அதிமுக கூட்டணியில் தொடர்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திருவண்ணாமலையில் முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் இல்லத் திருமண விழாவில் நேற்று பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “234 தொகுதிகளிலும் பாமகவை பலப்படுத்தி வருகிறோம். கூட்டணி பற்றி, இப்போது கேள்வி கேட்க வேண்டாம். கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் கட்சிகளின் தலைவர்கள் பேசுவர்” என்றார்.
பின்னர் அவரிடம், இப்போது உள்ள கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த கேள்விக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். நாங்கள், அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம், தொடருவோம். அதிமுக அரசு, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை பலமுறை தெரிவித்துள்ளேன். இப்போதும் கூறுகிறேன்” என்றார்.