க.அன்பழகன் மறைவு: திமுக நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து: ஸ்டாலின் இரங்கல்

க.அன்பழகன் மறைவு: திமுக நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து: ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

க.அன்பழகன் மறைவை ஒட்டி ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடும்படியும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். அவரது மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

“முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும் 43 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளராகவும் திமுக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மறைவடைந்ததையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு, கட்சிக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in