

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடத்திய கோவிட்-19 ஆய்வுக்குப் பின் 25 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கோவிட்-19 விழிப்புணர்வு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசி யதாவது:
கோவிட்-19 குறித்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவி ரப்படுத்த மாவட்ட அளவில் ஒருங் கிணைப்புக் குழு கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 மருத்துவக் குழுக்கள் மூலம் மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜன.28 முதல் மார்ச் 4-ம் தேதி வரை 15,432 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சீனாவிலிருந்து 69 பயணிகள், இத்தாலியிலிருந்து வந்த 2 பேர் பரிசோதிக்கப்பட்டதில் கோவிட்-19 தாக்குதல் அறிகுறி ஏதும் இல்லை. சிங்கப்பூர், இலங்கை, துபாயிலிருந்து வந்த 109 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 25 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை வார்டில் 8 படுக்கைகள், 4 வெண்டிலேட்டர் வசதியுடன் தயாராக உள்ளது. சுகாதாரமான உணவை சாப்பிட வேண்டும், கொதிக்க வைத்த தண்ணீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த உணவுகள், ஐஸ்கிரீம்களை தவிர்ப்பது நல்லது என்று கூறினார்.
மருத்துவ இணை இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் ப்ரியா மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.