நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் தற்கொலை

கனகசபை
கனகசபை
Updated on
1 min read

புதுச்சேரியைச் சேர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவரது வீடு, புதுச்சேரி அண்ணா சாலை திருமுடிநகரில் உள்ளது. ஆனந்தராஜுக்கு 5 சகோதரர்கள், 2 தங்கைகள் உள்ளனர். அனைவரும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவரது சகோதரரில் ஒருவர் கனகசபை(55) வட்டிக்கு பணம் தருவது, ஏலச்சீட்டு உள்ளிட்ட தொழில்களைச் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலைகனகசபையின் வீட்டுக் கதவுதிறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கனகசபை இறந்து கிடந்தார். அருகில் விஷ பாட்டில்கள் இருந்தன.பெரியக்கடை போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். கனகசபை வீட்டில் கடிதம் கிடைத்ததாக கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in