

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா இன்றும், நாளையும் (மார்ச் 6, 7 ) நடைபெறவுள்ளது.
இன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகள் புறப்பட்டன. மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து திருப்பலி, தேர்ப்பவனி நடைபெறும். நாளை காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இரண்டு நாள் விழாவில் இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து தமிழகத்தில் இருந்து 74 விசைப்படகுகளில்
1989 ஆண்கள், 466 பெண்கள், 41 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள், 24 நாட்டுப்படகுகளில் 315 ஆண்கள், 34 பெண்கள், 10 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள் என 2 ஆயிரத்து 903 பேர் சென்றுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு பின் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய கடலோரக்காவல் படை, இலங்கை கடற்படையினர் இணைந்து செய்துள்ளனர்.
-எஸ்.முஹம்மது ராஃபி