எனக்கு ஏமாற்றம்: ரஜினி பரபரப்பு பேட்டி

எனக்கு ஏமாற்றம்: ரஜினி பரபரப்பு பேட்டி
Updated on
1 min read

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசினோம். எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என ரஜினி பரபரப்பாகப் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு 2017-ம் ஆண்டு டிச.31 அன்று வெளியானது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன். எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுப்பேன். 2021 சட்டப்பேரவத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவேன். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று கூறி ரஜினி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினியின் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆன்மிக அரசியல் என ரஜினி அளித்த பேட்டியும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் சில பேட்டிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாஜக ஆதரவு அரசியல் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் ரஜினி ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டபடி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகவும், மாநாடு , பொதுக்கூட்டம், கூட்டணி அரசியல் என அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்க உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

அதன்படி இன்று ரஜினி தனது ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, ஒருமணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும் கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா?

அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும்.

2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன? கூட்டத்தில் என்ன பேசினீர்கள்?

கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? கூட்டம் எப்படி இருந்தது?

மாவட்டச் செயலாளர்களுடன் அதுகுறித்துத்தான் பேசினேன். கூட்டம் திருப்தியாக இருந்தது. அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கெல்லாம் நிறைய திருப்தி. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன்.

ஏமாற்றம் என்றீர்களே அது என்ன?

எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். நேரம் வரும்போது சொல்கிறேன்.

இவ்வாறு ரஜினி பேட்டி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in