

காவிரியின் குறுக்கே புதிய அணை கள் கட்டுவது உறுதி என்று கூறிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவைக் கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகேயுள்ள பெரியதிருமங் கலத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கிய மதிமுக தொண்டரணிப் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந் தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தோற்றது ஆறுதல் அளிக்கிறது. எனினும், ரணில் வென்றதால் தமிழர்களுக் குப் பயன் எதுவும் இல்லை. இலங்கை அதிபராக சிறிசேனா பொறுப்பேற்ற பிறகும், தமிழர் களுக்கு அதிகாரங்கள் எதுவும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. கிழக்கு பகுதியில் 1 சதவீதம் இருந்த சிங்களர்கள் இன்று 36 சதவீதமாக அதிகரித்துள்ளனர். தமிழர்களின் தாயகப் பகுதி சிங்களரின் குடியேற்றமாக மாறிவிட்டது. அங்கிருந்து இலங்கை ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியிருப்புகளையும் அகற்ற வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் கொல் லப்பட்டபோது அதிமுகவினர் போராட்டம் நடத்தவில்லை. கண் டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மைகளை எரிப்பது சரியல்ல.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவது உறுதி என்று கூறிய மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவைக் கண்டித்து அதிமுகவினர் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால், நான் முதல் வரைப் பாராட்டியிருப்பேன்.
மதுக் கடைகளுக்கு எதிராகப் போராட மாணவர்களும், இளைஞர் களும் முன்வர வேண்டும். அரசிய லால் மதுக் கடைகளை ஒழிக்க முடியாது. இந்த விவகாரத்தில் வன்முறை கூடாது.
வரும் செப்டம்பர் 15-ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள மதிமுக மாநாடு, அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும். இந்த மாநாடு இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முன்னெடுக்கும். திராவிட அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.