Published : 05 Mar 2020 08:34 AM
Last Updated : 05 Mar 2020 08:34 AM

பயணிகளை கவரும் வகையில் குறுகிய தூர அரசு சொகுசு விரைவு பேருந்துகளில் கட்டணம் குறைப்பு- இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது

சென்னை

பயணிகளை கவரும் வகையில் குறுகிய தூரம் செல்லும் 700 அரசுசொகுசு விரைவு பேருந்துகளில் திடீரென கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை இன்று முதல் அமலாகிறது.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பழைய பேருந்துகள் நீக்கப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலும் சொகுசு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இந்த புதிய வகை பேருந்துகள் பயணிகளிடையே வரவேற்பை பெற்றபோதிலும், ஏழை, எளிய மக்கள் இந்த சொகுசு பேருந்துகளில் பயணம் செய்ய போதிய ஆர்வம் காட்டவில்லை. இதற்கு அப்பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது காரணமாக உள்ளது. எனவே, பயணிகளை கவரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் திடீரென கட்டணத்தை குறைத்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.15

பயணிகளைக் கவரும் வகையில் புதிய வகை பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கி வருகிறோம். இந்த வகையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் மட்டும் சுமார் 700 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதற்கிடையே, இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறுகிய தூர அரசுசொகுசு பேருந்துகளில் கட்டணத்தை குறைத்துள்ளோம்.

அதன்படி, 2 2 இருக்கை சொகுசு அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தைரூ.25-ல் இருந்து ரூ.15 ஆகவும், 2 3 இருக்கை சொகுசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.15-ல்இருந்து ரூ.10 ஆகவும் குறைத்துள்ளோம். இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலாகிறது.

பயணிகள் அதிகரிக்க வாய்ப்பு

இது தொடர்பாக அறிவிப்பைஅனைத்து பணிமனை மேலாளர்களிடமும் தெரிவித்துள்ளோம். பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், பேருந்துகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த கட்டண குறைப்ப்பால் பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் வரைஅதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x