

கடந்த வாரம் கோவையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆளுநரை இந்த விழாவுக்கு அழைத்து வந்ததே உள்ளூர் ஆளும்கட்சி விவிஐபி தான் என்கிறார்கள். அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவரும் அந்த விவிஐபி-யின் குடும்பம் தெலங்கானாவிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்காக புராஜெக்ட் ஒன்றை குறிவைத்திருக்கிறதாம். அதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் முடிந்து கோப்பு அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறதாம். அதை சுபிட்சமாக முடிக்க வசதியாகவே ஆளுநரை கோவைக்கு அழைத்து குளிர்வித்திருக்கிறதாம் விவிஐபி குடும்பம்.