

வரும் செப்.9-ல் பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழுவில் கலந்துகொண்ட ஜி.கே மணி செய்தியாளர்களிடம் பேசினார்.
''வரும் செப்.9-ல் பாமக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையேற்று நடத்துகிறார்.
போராட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் '' என்று ஜி.கே.மணி கூறினார்.