

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்வோர், பதிவேற்றம் செய்வோர் உள்ளிட்டோரை தொழில்நுட்ப உதவியுடன் காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கண்காணிப்பில் ஆபாச படங்கள், குறிப்பாக குழந்தைகளின் ஆபாச படங்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவிறக்கம் செய்வோர், பதிவேற்றம் செய்வோர், பகிர்வோர் உள்ளிட்டோரை கண்டறிந்து கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் சீனு(26). பொறியியல் பட்டதாரியான இவர் ஓசூரில் பணியாற்றி வந்தார். 2019-ம் ஆண்டில் இவர் தனது செல்போன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிக அளவில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அதேபோல, இந்தப் படங்களை தன் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
சீனுவின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்தசென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உத்தரவின்பேரில் தருமபுரி ஏடிஎஸ்பி சுஜாதா தலைமையில் போலீஸார் நேற்று சீனுவை கைது செய்தனர்.