Published : 03 Mar 2020 07:56 PM
Last Updated : 03 Mar 2020 07:56 PM

கொடைக்கானலில் உலக வன உயிரின தின ஊர்வலம், கருத்தரங்கு: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது.

கொடைக்கானல் வனத்துறை சார்பில் நடைபெற்ற உலக வன உயிரின தினவிழாவில் அனைத்து உயிரினங்களுக்கும் நிலையான வாழ்க்கையை அமைப்பது குறித்த ஊர்வலம் கொடைக்கானல் கே.ஆர்.ஆர்., கலையரங்கம் முன்பு தொடங்கியது.

ஊர்வலத்தை வனச்சரகர் ஆனந்தகுமார் தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் வனத்துறை அலுவலகத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் வனவிலங்கு ஆர்வலர் ஜனனி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

சர்வதேச பள்ளி ஆசிரியர் ராஜமாணிக்கம், ஆராய்ச்சியாளர் ஜேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் வன உயிரினங்களின் வாழ்வாதாரம், இனவிருத்தி, மேற்குதொடர்ச்சிமலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வனப்பகுதிகளை மேம்படுத்துவது குறித்துப் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x