2 எம்எல்ஏக்கள் மறைவையடுத்து திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி என அறிவிப்பு

2 எம்எல்ஏக்கள் மறைவையடுத்து திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி என அறிவிப்பு
Updated on
1 min read

திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி மற்றும் எஸ்.காத்த வராயன் ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.சாமி. திமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சாராக இருந்த இவர் கடந்த பிப்.27-ம் தேதி வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். இவரைத் தொடர்ந்து, மற்றொரு திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.காத்தவராயன் பிப்.29-ம் தேதி சனிக்கிழமை காலமானார்.

இவர்கள் இருவரது மறைவு தொடர்பாக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 9-ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், விதிகளின்படி, 2 திமுக உறுப்பினர்கள் மறைவு தொடர்பான இறப்புக் கடிதத்தின் அடிப்படையில், இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹு வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதத்தின்படி, 2 தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும். விதிகளின்படி, ஒரு தொகுதி காலியாக இருந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in