Published : 03 Mar 2020 07:08 AM
Last Updated : 03 Mar 2020 07:08 AM

என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்?- அமித் ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: சென்னையில் முதல்வருடன் முரளிதர ராவ் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக அமைச்சர் கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று சந் தித்துப் பேசினர். தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக சட்டப்பேரவையில் தீர் மானம் நிறைவேற்றுவது தொடர் பாக அமித்ஷாவிடம் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பு நடைபெற்ற அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் பழனிசாமியை பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தி லும் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற் றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் முஸ்லிம் அமைப்புகளும் தமிழக அரசை வலியுறுத்தி வரு கின்றன. பல்வேறு போராட்டங் களையும் நடத்தி வருகின்றன.டெல்லி ஷாகின் பாக் போல சென்னை வண்ணாரப்பேட்டையில் 17 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன் றத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தெலங்கானா, ஆந்திரா, பிஹார் ஆகிய மாநிலங்களை ஆளும் கட்சிகள், என்ஆர்சியை ஏற்க மாட்டோம் என் றும், 2010-ல் நடந்தது போலேவே என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தப் படும் என்றும் அந்தந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதைப் பின் பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர அதிமுக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப் படுகிறது. நேற்று முன்தினம் விருது நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, என்பிஆர் விவகாரத்தில் ஆந்திரா, தெலங் கானாவை பின்பற்றப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென டெல்லி சென்ற தமிழக அமைச் சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அரைமணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள், அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கியுள்ளனர். பழைய முறைப்படி என்பிஆர் நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர இருப்பது குறித்தும் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு நடந்த அதே நேரத் தில், சென்னையில் முதல்வர் பழனிசாமியை பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சந்தித்துப் பேசினார். என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர் மானம் கொண்டுவர திட்டமிட்டுள் ளது பற்றியும், மாநிலங்களவை தேர்தல் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு தேமுதிக பிடிவாதம் பிடித்து வரும் நிலை யில், பாஜகவும் ஓர் உறுப்பினர் பதவியை கேட்பதாக கூறப்படு கிறது. அது குறித்தும் முதல்வரிடம் முரளிதர ராவ் பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100 சதவீத பாதுகாப்பு

டெல்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சிறு பான்மையின மக்களின் முழு இதயத்துடிப்பாக தமிழக அரசும் அதிமுகவும் இருக்கின்றன. அத னால், முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு 100 சதவீதத்துக்குமேல் தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் மீண்டும் இணைந்தால், ’16 வயதினிலே’ மாதிரி நல்ல படம் கிடைக்கலாம். என்பிஆர் தொடர்பாக முதல்வர் கோரியுள்ள திருத்தத்துக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x