தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி ஆயுதப்படைக் காவலர் உயிரிழப்பு

காளிமுத்து: கோப்புப்படம்
காளிமுத்து: கோப்புப்படம்
Updated on
1 min read

மின்சாரம் தாக்கியதில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தஞ்சாவூரில் இன்று உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுப்பிரமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தருமர் மகன் காளிமுத்து (27). இவர் 2018-ம் ஆண்டில் காவல் துறையில் இணைந்தார். மதுரையில் பயிற்சி முடித்த பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் ஆயுதப் படையில் பணியில் சேர்ந்தார்.

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த இவர், காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 2) காலை குளிப்பதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பி எலக்ட்ரிக் ஹீட்டர் கருவி மூலம் வெந்நீர் தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது, எலக்ட்ரிக் ஹீட்டர் கருவியைத் தொட்ட இவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால், காளிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெகுநேரமாகக் கதவு திறக்கப்படாததால் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in