Published : 02 Mar 2020 02:35 PM
Last Updated : 02 Mar 2020 02:35 PM

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: மானியக் கோரிக்கைகள்; எந்த நாளில் எந்தத் துறை?- முழுமையான பட்டியல்

சட்டப்பேரவை மானியக் கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கை கூட்டம் நடக்கும். எந்த நாளில் எந்தத் துறையின் மானியக் கோரிக்கை நடக்க உள்ளது என்பது குறித்து முழுமையான பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி ஜனவரி 9-ம் தேதி அன்று முடிந்தது.

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 17-ம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி அன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மானியக் கோரிக்கைக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல்.9-ம் தேதி வரை ஒரு மாதம் நடத்தலாம் என இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எந்தெந்த நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்களுக்குக் கீழ் உள்ள 80 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும்.

மொத்தம் 31 நாட்களில் மார்ச் 9-ம் தேதி முதல் நாள் இரங்கல் கூட்டத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும். மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மார்ச் 11-ம் தேதியிலிருந்து மானியக்கோரிக்கை கூட்டம் நடக்கும்.

சட்டப்பேரவைக் கூட்டம் முழு விவரம்:

மார்ச் 9 - திங்கட்கிழமை: இரங்கல் குறிப்பு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி. சாமி, காத்தவராயன் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஒத்திவைப்பு.

மார்ச் 10 - செவ்வாய்க்கிழமை: பேரவைக் கூட்டம் இல்லை.

மார்ச் 13 - புதன்கிழமை: 1.வனம் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை), 2. சுற்றுச்சூழல் ( சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை )

மார்ச் 12 - வியாழக்கிழமை: 1.பள்ளிக் கல்வித்துறை, 2. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, 3. உயர் கல்வித்துறை

மார்ச் 13 - (வெள்ளிக்கிழமை): 1. எரிசக்தித் துறை, 2. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை (உள்துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

மார்ச் 14 - சனிக்கிழமை: அரசு விடுமுறை

மார்ச் 15 - ஞாயிற்றுக்கிழமை : அரசு விடுமுறை

மார்ச் 16 - திங்கட்கிழமை : 1.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை , 3. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

மார்ச் 17 - செவ்வாய்க்கிழமை: 1. மீன்வளம் (கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறை), 2.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை,3.கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை)

மார்ச் 18 - புதன்கிழமை: 1. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, 2. கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 3. பாசனம் (பொதுப்பணித்துறை)

மார்ச் 19 - வியாழக்கிழமை: 1. கூட்டுறவு (உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), 2. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)

மார்ச் 20 - வெள்ளிக்கிழமை: 1. நீதி நிர்வாகம், 2. சிறைச்சாலைகள் துறை (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) 3. சட்டத்துறை

மார்ச் 21 - சனிக்கிழமை: சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை 2. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 3. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.

மார்ச் 22 - ஞாயிற்றுக்கிழமை: அரசு விடுமுறை

மார்ச் 23 - திங்கட்கிழமை: 1. 2020-2021 ஆம் ஆண்டில் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவை முன்வைத்தல்.

2. 2019-2020 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளித்தல்.

3. 2019-2020 ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி).

4. 2019- 2020 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிலை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தலும் ஆய்வு செய்தலும் நிறைவேற்றம் (விவாதமின்றி).

5. 2020-2021 ஆம் ஆண்டின் அளவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி).

6. 2020-2021 ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தலும் ஆய்வு செய்தலும் நிறைவேற்றம் (விவாதமின்றி).

7. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

மார்ச் 24 - செவ்வாய்க்கிழமை: 1.தொழில்துறை, 2.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

மார்ச் 25 - புதன்கிழமை: தெலுங்கு வருடப் பிறப்பு - அரசு விடுமுறை

மார்ச் 26 - வியாழக்கிழமை: 1. கைத்தறி மற்றும் துணிநூல் (கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் காதித்துறை) 2.செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை) 3. எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)

மார்ச் 27 - வெள்ளிக்கிழமை: காவல் (உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) 2. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் (உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

மார்ச் 28- சனிக்கிழமை: அரசு விடுமுறை

மார்ச் 29 - ஞாயிற்றுக்கிழமை: அரசு விடுமுறை

மார்ச் 30 - திங்கட்கிழமை: காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை), 2. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)- பதிலுரை, 3. வணிகவரிகள் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) 4. முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை (வணிகவரி மற்றும் பதிவுத் துறை) 5. பால்வளம் (கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை)

மார்ச் 31 - செவ்வாய்க்கிழமை: வேளாண்துறை.

ஏப்ரல் 1 - புதன்கிழமை: 1. தகவல் தொழில்நுட்பவியல்துறை, 2. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, 3. இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்த்தணிப்பு.

ஏப்ரல் 2- வியாழக்கிழமை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை.

ஏப்ரல் 3- வெள்ளிக்கிழமை: 1. சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு ( சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, 2. இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை).

ஏப்ரல் 4- சனிக்கிழமை: 1. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 2. கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை).

ஏப்ரல் 5- ஞாயிற்றுக்கிழமை: அரசு விடுமுறை.

ஏப்ரல் 6- திங்கட்கிழமை: மகாவீர் ஜெயந்தி - அரசு விடுமுறை.

ஏப்ரல் 7 - செவ்வாய்க்கிழமை: இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் நிர்வாகம் (உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) 2.போக்குவரத்துத் துறை.

ஏப்ரல் 8 - புதன்கிழமை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 2. தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை).

ஏப்ரல் 9 - வியாழக்கிழமை: 1.பொதுத்துறை 2. மாநில சட்டபேரவை 3. ஆளுநர் மற்றும் அமைச்சரவை 4. நிதித்துறை 5. திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை 6. ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகளும் 7. அரசினர் முன் சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்தலும், ஏனைய அரசினர் அலுவல்கள்.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு.

தினமும் பேரவை வழக்கம் போல் காலை 10 மணிக்குக் கூடும்.

இவ்வாறு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x