

மதுக்கடைக்கு எதிரான ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று கோஷமிடுவது அரசியலமைப்புச் சட்ட கடமை களில் ஒன்றுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத் தில் ஆர்.நாகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கோவை சட்டக் கல்லூரியில் கடந்த ஆண்டு பி.எல். படிப்பை முடித்தேன். வழக்கறிஞராக பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் விண்ணப்பித்தேன். என் மீது குற்ற வழக்கு நிலுவை யில் இருப்பதாகக் கூறி, விண்ணப் பம் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பார் கவுன்சிலில் என்னை வழக்கறி ஞராகப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவில், ‘கோவை - மருதமலை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி 2013-ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனுதாரர் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூத் வாதிடுகையில், ‘‘குற்றப் பின்னணி உள்ளவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ்வழக்கு முடியும் வரை அவர் காத்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சமூக விரோதிகள், குற்றவாளி கள் போன்றவர்கள் வழக்கறிஞராகி அதைப் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துவதை தடுக்கத்தான் குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் கட்சித் தலைவரின் கொடும்பாவி எரிக்கப்பட்ட வழக்கி லும், அவதூறு வழக்கிலும் தொடர் புடையவர்களை வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டும் என்று பார்கவுன்சிலுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் களை குற்றப் பின்னணி உள்ளவர் களாக கருதிவிட முடியாது.
அதுபோல, மனுதாரரும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உன்னதமான நோக்கத்துக்காகத்தான் மதுக் கடைக்கு எதிரான ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று கோஷமிட் டுள்ளார். இதுவும் அரசியல மைப்புச் சட்டப்படியான கடமை களில் ஒன்றாகும். மனுதாரரின் போராட்டத்தால் பொது அமை திக்கு பங்கமோ, வன்முறையோ, பொதுச் சொத்துகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்படவில்லை.
எனவே, மனுதாரர் மீதான குற்ற வழக்கை கருத்தில் கொள்ளாமல், அவரது விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பார் கவுன்சில் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.