Published : 01 Mar 2020 08:27 AM
Last Updated : 01 Mar 2020 08:27 AM

தமிழகம் முழுவதும்38 ஆர்டிஓ அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை

சென்னையில் 6 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்டிஓ்) உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 38 ஆர்டிஓகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவாக பணியாற்றிய ஏ.அங்கமுத்து கோயம்புத்தூர் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கும், வேலூர் ஆர்டிஓ என்.ராமகிருஷ்ணன் சென்னை வடக்கு இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், சென்னையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவாக பணியாற்றிய கே.கருணாகரன் சென்னை தெற்கு மேற்குஅலுவலகத்துக்கும், ஏற்கெனவே இங்கு பணியாற்றிய எம்.தரன் சென்னை வடக்கு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை வடக்கு வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓவாக பணியாற்றிய ஜி.அசோக்குமார் சென்னை மத்திய ஆர்டிஓ அலுவலகத்துக்கு் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் மொத்தம்38 ஆர்டிஓகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x