

குடியுரிமை சட்டத்தால் ஒருவருக்குகூட பாதிப்பு இல்லை. அதே சமயம், என்ஆர்சியைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு எதிராகதமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள்போல, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்,
குடியுரிமை சட்டத்தால் ஒருவருக்குகூட பாதிப்பு இல்லை. அதே சமயம், என்ஆர்சியைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை ராமதாஸ் எடுப்பார். திமுக, அதிமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவரதுகருத்து.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
நலம் விசாரிப்பு
இதற்கிடையே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி, தலைவர்ஜி.கே.மணி, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.