Published : 01 Mar 2020 07:42 AM
Last Updated : 01 Mar 2020 07:42 AM

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் பள்ளிகளுக்கு மார்ச் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் மார்ச் 7-ம் தேதி வரை பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக் கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் 42 பேர் உயிரிழந் துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காய மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடு களும், கடைகளும் தீக்கிரையாகியுள்ளன.

இந்த சூழலில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் ஆயிரக்கணக் கான போலீஸாரும், துணை ராணுவப் படை யினரும் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப் பட்டுள்ளனர். மேலும், அங்கு ஒரு மாதக் காலத்துக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, கடந்த 5 நாட்களாக டெல்லியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகி யவை பரவலாக திறந்திருந்தன. ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகள் வழக்கம் போல இயங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை யில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

டெல்லியில் கலவரம் நடந்து முடிந்திருக் கும் சூழலில், சமூக வலைதளங்களில் அது தொடர்பான ஏராளமான பதிவுகள் வெளிவந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி அரசு உயரதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

வெறுப்புணர்வை தூண்டும்விதமான பதிவுகளையோ அல்லது வதந்திகளையோ சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண் டாம் என பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இரு பிரிவினர் இடையே பகையை உருவாக் கும் வகையிலான பதிவுகளை சமூக வலை தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்ற மாகும். இதுதொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும், இதுபோன்ற பதிவுகளை பகிர் பவர்கள் குறித்து டெல்லி அரசுக்கு புகார் தெரிவிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணை வெளியிடவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப் பட்ட வடகிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிக ளுக்கு வரும் 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக இயல்பு நிலை திரும்புவதற்காகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதற்காக, பொதுத் தேர்வு தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டிருக் கின்றன.

அமைதி ஊர்வலத்தில் கபில் மிஸ்ரா

வன்முறைக்கு எதிராகவும் சகோதரத் துவத்துக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் அமைதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.

டெல்லியில் கலவரம் ஏற்படுவதற்கு காரணமான வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் கபில் மிஸ்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, கலவரத்தில் உயிரிழந்த 2 போலீஸாரின் குடும்பத் தினருக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மெட்ரோ ரயிலில் கோஷம்

டெல்லியில் கலவரம் முடிந்து அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மெட்ரோ ரயிலில் குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு ஆதரவாக சிலர் கோஷம் எழுப்பிய தால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 இளைஞர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென எழுந்த அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் 'தேசத் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்' என்றும் கோஷமிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகலவறிந்த சிஐஎஸ்எப் துணை ராணுவப் படையினர், அடுத்த ரயில் நிலையம் வந்ததும் அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x