Published : 01 Mar 2020 07:36 AM
Last Updated : 01 Mar 2020 07:36 AM

சென்னையில் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; கேன் குடிநீர் உற்பத்தியாளர் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நீடிப்பு- பேச்சுவார்த்தைக்கு அணுகவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக தொடர்வதால் குடிநீர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நிலத்தடி நீர் எடுக்க உரிமம் இல் லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண் டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதையடுத்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள கேன் குடிநீர் கடந்த 2 நாட்களாக வீடுகள், கடைகள், ஓட்டல்களுக்கு விநியோ கிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் பரவ லாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால் கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் பலசரக்கு கடை வியாபாரி ஒருவர் கூறும்போது, “திருவள்ளூரில் உள்ள கேன் குடிநீர் தயாரிப்பு ஆலையில் இருந்து கேன் குடிநீர் வருகிறது. வழக்கமாக கொடுக்கப் படும் வீடுகளுக்கு மட்டும் கேன் குடிநீர் வழங்குகிறோம்.தட்டுப்பாடு இருப்பதால் கடைகளில் இருப்பு வைக்க முடியவில்லை" என்றார்.

மற்றொரு வியாபாரி கூறும் போது, “கேன் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, சென்னை குடிநீர் வாரிய குழாய்களில் தண்ணீர் பிடித்து அதை கேன் குடிநீர் என்று சிலர் விற்கின்றனர். சுத்திகரிக்கப்படாத இந்தக் குடிநீரால் மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகரன் கூறிய தாவது:

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் எளிய முறையில் பெறுவதற் கான வழிமுறைகளை தமிழக அரசு விரைவில் உருவாக்கி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண் டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அரசு இதுவரை எங் களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்கள் கோரிக்கையை மக்க ளிடம் எடுத்துரைக்கும் வகையிலும் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தும் வகையிலும் அறவழியில் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து கேன் குடி நீர் உற்பத்தியாளர்களை ஒருங் கிணைத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேச்சுவார்த்தை நடத்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அரசை அணுகவில்லை என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, நீதிமன்ற உத் தரவுகளின்படி நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். அதேபோல, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு, அவர்கள் உதவி கோரி அணுகினால், விதி முறைகளுக்கு உட்பட்டு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும். எனினும், கேன் குடிநீர் உரிமை யாளர்கள் இதுவரை பேச்சு வார்த்தைக்கு அணுகவில்லை.

சென்னையில் உள்ள மக் களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க, சென்னை குடிநீர் வாரியம் மூலம் மாற்று வழிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x