

ஆந்திராவில் நேற்று முழு அடைப் புப் போராட்டம் நடந்ததால் தமிழகத் தில் இருந்து அம்மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாக, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் இரு மாநில அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. சென்னை கோயம் பேட்டில் இருந்து திருப்பதி, சித்தூர், நெல்லூர், காளஹஸ்தி, ஹைதரா பாத், விஜயவாடா, வாரங்கல் உள் ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் மாலை 5 மணி பிறகே புறப்பட்டுச் சென்றன.
இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு மேல் படிப்படியாக பேருந்துகளை இயக் கினோம்’’ என்றனர்.