

காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, சென்னை வடக்கு மாவட்டதிமுக செயலாளரான சுதர்சனம் மூலமாக திமுகவுக்கு தூது அனுப்பினார். இதைக் கேள்விப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் கோபண்ணாவும் “மனோவை திமுகவில் சேர்க்க வேண்டாமே” என திமுக தலைமைக்கு அன்பான வேண்டுகோள் வைத்தார்களாம்.
அதை ஏற்று, கூட்டணி தர்மத்தை காரணம் காட்டி மனோவுக்கு தற்காலிகமாக ‘நோ என்ட்ரி’ போட்டுவிட்டதாம் திமுக. இதேபோல் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் முன்னாள் எம்பி ஒருவரின் வாரிசு ஆகியோரின் அறிவாலய பிரவேச விருப்ப மனுக்களையும் கிடப்பில் வைத்திருக்கிறதாம் திமுக.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)