என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
Updated on
1 min read

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவத்தின் 13 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த 23 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொதுத்துறை நிறுவனமாக ‘நவரத்னா’ தகுதியைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் அலட்சியப்படுத்துவது மட்டும் அன்றி, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி வருவது வேதனை அளிக்கிறது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் திருமாவளவன் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் உடனடியாக தொழிற்சங்கத் தலைவர் மீதான பணி நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in