உடல் உறுப்பு தானம் வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்

உடல் உறுப்பு தானம் வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
Updated on
1 min read

உடல் உறுப்பு தானம், உலக அமைதி, நடைப்பயிற்சியின் அவசியம் ஆகியனவற்றை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

மதுரை மேற்கு ரோட்டரி, டோக் பெருமாட்டிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரை சமூக அறிவியல் கழகம் இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தின.

டோக் பெருமாட்டிக் கல்லூரியின் முதல்வர் கிறிஸ்டி யானா சிங், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம், அமெரிக்கன் கல்லூரியில் இருந்து புறப்பட்டு காந்தி மியூசியத்தைச் சென்றடைந்தது. ஊர்வலத்தில் அமெரிக்கன் மற்றும் டோம் பெருமாட்டி கல்லூரிகளின் ரோட்டராக்டர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

மதுரை அத்தியாயம் தலைவர் கல்யாண் மற்றும் பயிற்சியாளர்கள் மித்ரன், பூர்ணிமா ஆகியோர் பேசினர்.

ஹீமோதெரபி காரணமாக முடி உதிர்தலால் பாதிக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதுவது குறித்து ரஞ்சிதா பேசினார்.

தொழிலதிபர் ரவி, மதுரை மெற்கு ரோட்டரி கிளப் , அமெரிக்கன் கல்லூரியின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராணி, டோக்பெருமாட்டிக் பெருமாட்டிக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in