செப். 2-ல் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: செங்கொடி சங்கம் அறிவிப்பு

செப். 2-ல் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: செங்கொடி சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

செப்டம்பர் 2-ம் தேதி சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக செங்கொடி சங்கம் அறிவித்துள்ளது.

ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார இணை ஆணையர் அலுவ லகம் முன்பு மாநகராட்சி துப்புரவு ஊழியர்களின் செங்கொடி சங்கம் சார்பாக நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய செங்கொடி சங்கத் தின் தலைவர் சீனிவாசலு கூறியதாவது:

அண்ணா நகர் மண்டலத்தில் 105-வது வட்டத்தில் கடந்த ஜூன் மாதம் மத்திய வட்டார இணை ஆணையர் தெருக்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் பார்த்த தெருக்களில் குப்பை இருந்ததால் 5 பெண்கள் உட்பட 8 துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு வார சம்பளத்தைப் பிடிக்க வாய்மொழி உத்தரவு அளித்துள்ளார்.

தொழிலாளர்கள் வேறு தெருக்களில் சுத்தம் செய்துகொண்டிருந்ததால் இணை ஆணையர் பார்வையிட்ட நேரத்தில் தெருக்களில் குப்பை அள்ளப் படவில்லை என்று விளக்கம் அளித்திருந் தனர். எனினும் விதிகளை பின்பற்றாமல் எந்தவித விசாரணையுமின்றி அவர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் காசநோயாளியான ஒரு பெண் ஊழியர், மருந்துகள் வாங்க பணம் இல்லாமல் தவிக்கிறார்.

அண்ணா நகர் மண்டலத்தில் 2800 துப்புரவு பணியாளர் காலியிடங்கள் உள்ளன என்பதை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மேயரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பர் 2-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தமும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

இணை ஆணையர் பார்வையிட்ட நேரத்தில் தெருக்களில் குப்பை அள்ளப்படவில்லை என்று தொழிலாளர்கள் விளக்கம் அளித்திருந்தனர். எனினும் எந்தவித விசாரணையுமின்றி சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in