ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று தொடக்கம்

ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று தொடக்கம்
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்பத்துக்குப் பயன்படும் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி-6 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிசாட்-6 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலை 4.52 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது.

ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 11.52 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட் ஏவும் திட்ட ஆயத்த ஆய்வுக் குழுவும், ஏவுவதற்கான அதிகாரக் குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

ஜிசாட்-6 செயற்கைக்கோளில் எஸ்-பேண்ட் தொலைத்தொடர்புக்குப் பெரிதும் பயன்படும் ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. 6 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஆன்டெனாதான் இஸ்ரோ இதுவரை தயாரித்துள்ள மிகப்பெரிய ஆன்டெனா என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in